‘காதலுக்கு மரியாதை’ டு ‘நண்பன்’… ‘தளபதி’ விஜய் நடித்த ரீமேக் படங்களின் லிஸ்ட்!

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ‘தளபதி’ விஜய். பிரபல இயக்குநரும், நடிகருமான எஸ்.ஏ.சந்திரசேகரின் மகனாக இருக்கும் விஜய், திரையுலகில் தனக்கென ஒரு ஃபார்முலாவை பிடித்து தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் ‘வெற்றி, குடும்பம், வசந்த ராகம், சட்டம் ஒரு விளையாட்டு, இது எங்கள் நீதி’ போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார் விஜய். அதன் பிறகு விஜய் கதையின் நாயகனாக அவதாரம் எடுத்த படம் ‘நாளைய தீர்ப்பு’.

இந்த படத்துக்கு பிறகு நடிகர் விஜய்-க்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் தமிழ் படங்கள் குவிந்தது. 1999-ஆம் ஆண்டு விஜய்யின் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. விஜய், சங்கீதா தம்பதியினருக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும், திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளனர். இப்போது, விஜய்யின் புதிய படமான ‘பீஸ்ட்’-ஐ நெல்சன் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்து வருகிறது. ‘பீஸ்ட்’-ஐ தொடர்ந்து விஜய்-யின் 66-வது படத்தை ‘தோழா’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் வம்சி இயக்க உள்ளார்.

மற்ற மொழிகளில் சூப்பர் ஹிட்டான பல படங்களின் தமிழ் ரீமேக்கில் விஜய் நடித்திருக்கிறார். அப்படி இதுவரை நடிகர் விஜய் நடித்த ரீமேக் படங்களின் லிஸ்ட் இதோ…

1.நண்பன் :

‘தளபதி’ விஜய் நடிப்பில் 2012-ஆம் ஆண்டு வெளியான படம் ‘நண்பன்’. இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்க, ஹீரோயினாக இலியானா நடித்திருந்தார். இப்படம் ஹிந்தியில் 2009-யில் ரிலீஸாகி சூப்பர் ஹிட்டான ‘3 இடியட்ஸ்’ படத்தின் ரீமேக்காம்.

2.காவலன் :

‘தளபதி’ விஜய் நடிப்பில் 2011-ஆம் ஆண்டு வெளியான படம் ‘காவலன்’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சித்திக் இயக்க, ஹீரோயினாக அசின் நடித்திருந்தார். இப்படம் மலையாளத்தில் 2010-யில் ரிலீஸாகி சூப்பர் ஹிட்டான ‘பாடிகார்ட்’ படத்தின் ரீமேக்காம்.

3.போக்கிரி :

‘தளபதி’ விஜய் நடிப்பில் 2007-ஆம் ஆண்டு வெளியான படம் ‘போக்கிரி’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பிரபு தேவா இயக்க, ஹீரோயினாக அசின் நடித்திருந்தார். இப்படம் தெலுங்கில் 2006-யில் ரிலீஸாகி சூப்பர் ஹிட்டான ‘போக்கிரி’ படத்தின் ரீமேக்காம்.

4.ஆதி :

‘தளபதி’ விஜய் நடிப்பில் 2006-ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஆதி’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ரமணா இயக்க, ஹீரோயினாக த்ரிஷா நடித்திருந்தார். இப்படம் தெலுங்கில் 2005-யில் ரிலீஸாகி சூப்பர் ஹிட்டான ‘அதனோக்கடே’ படத்தின் ரீமேக்காம்.

5.கில்லி :

‘தளபதி’ விஜய் நடிப்பில் 2004-ஆம் ஆண்டு வெளியான படம் ‘கில்லி’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான தரணி இயக்க, ஹீரோயினாக த்ரிஷா நடித்திருந்தார். இப்படம் தெலுங்கில் 2003-யில் ரிலீஸாகி சூப்பர் ஹிட்டான ‘ஒக்கடு’ படத்தின் ரீமேக்காம்.

6.வசீகரா :

‘தளபதி’ விஜய் நடிப்பில் 2003-ஆம் ஆண்டு வெளியான படம் ‘வசீகரா’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான கே.செல்வபாரதி இயக்க, ஹீரோயினாக சினேகா நடித்திருந்தார். இப்படம் தெலுங்கில் 2001-யில் ரிலீஸாகி சூப்பர் ஹிட்டான ‘நூவு நாக்கு நச்சாவ்’ படத்தின் ரீமேக்காம்.

7.பத்ரி :

‘தளபதி’ விஜய் நடிப்பில் 2001-ஆம் ஆண்டு வெளியான படம் ‘பத்ரி’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான அருண் பிரசாத் இயக்க, ஹீரோயினாக பூமிகா நடித்திருந்தார். இப்படம் தெலுங்கில் 1999-யில் ரிலீஸாகி சூப்பர் ஹிட்டான ‘தம்முடு’ படத்தின் ரீமேக்காம்.

8.ப்ரண்ட்ஸ் :

‘தளபதி’ விஜய் நடிப்பில் 2001-ஆம் ஆண்டு வெளியான படம் ‘ப்ரண்ட்ஸ்’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சித்திக் இயக்க, ஹீரோயினாக தேவயாணி நடித்திருந்தார். இப்படம் மலையாளத்தில் 1999-யில் ரிலீஸாகி சூப்பர் ஹிட்டான ‘ப்ரண்ட்ஸ்’ படத்தின் ரீமேக்காம்.

9.ப்ரியமானவளே :

‘தளபதி’ விஜய் நடிப்பில் 2000-ஆம் ஆண்டு வெளியான படம் ‘ப்ரியமானவளே’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான கே.செல்வபாரதி இயக்க, ஹீரோயினாக சிம்ரன் நடித்திருந்தார். இப்படம் தெலுங்கில் 1996-யில் ரிலீஸாகி சூப்பர் ஹிட்டான ‘பவித்ர பந்தம்’ படத்தின் ரீமேக்காம்.

10.நினைத்தேன் வந்தாய் :

‘தளபதி’ விஜய் நடிப்பில் 1998-ஆம் ஆண்டு வெளியான படம் ‘நினைத்தேன் வந்தாய்’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான கே.செல்வபாரதி இயக்க, ரம்பா, தேவயாணி என இரண்டு ஹீரோயின்ஸ் நடித்திருந்தனர். இப்படம் தெலுங்கில் 1996-யில் ரிலீஸாகி சூப்பர் ஹிட்டான ‘பெல்லி சந்ததி’ படத்தின் ரீமேக்காம்.

11.காதலுக்கு மரியாதை :

‘தளபதி’ விஜய் நடிப்பில் 1997-ஆம் ஆண்டு வெளியான படம் ‘காதலுக்கு மரியாதை’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பாசில் இயக்க, ஹீரோயினாக ஷாலினி நடித்திருந்தார். இப்படம் மலையாளத்தில் 1997-யில் ரிலீஸாகி சூப்பர் ஹிட்டான ‘அனியத்திப்ராவு’ படத்தின் ரீமேக்காம்.

Share.