மகேஷ் பாபுவுக்கு பதிலாக நடித்த விஜய்… அந்த மெகா ஹிட் படம் எது தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘மாஸ்டர்’ இந்த ஆண்டு (2021) பொங்கல் ஸ்பெஷலாக தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடத்திலும் ரிலீஸானது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.

இதில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். தளபதிக்கு எதிரியாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். விஜய்யின் அடுத்த படமான ‘பீஸ்ட்’-ஐ நெல்சன் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்து வருகிறது. இதில் விஜய்-க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மேலும், பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் இயக்குநர் செல்வராகவன் நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளதாம்.

‘தளபதி’ விஜய்யின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘துப்பாக்கி’. 2012-ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் விஜய்-க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க, டாப் இயக்குநர்களில் ஒருவரான ஏ.ஆர்.முருகதாஸ் இதனை இயக்கியிருந்தார். இதில் ‘ஜெகதீஷ்’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார் விஜய். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. ஆனால், இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க வைக்க வேண்டுமென இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் முதல் சாய்ஸாக இருந்தது முன்னணி தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவாம். பின், சில காரணங்களால் மகேஷ் பாபுவால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.

Share.