விஜய் – அஜித் படங்களின் வில்லன் நடிகர் காலமானார்… வருத்தத்தில் திரையுலகினர்!

சமீப காலமாக தொடர்ச்சியான மரணங்கள் ரசிகர்களுக்கும், திரையுலகினருக்கும் அதிர்ச்சியைத் தருகிறது. பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், பிரபல காமெடி நடிகர்கள் விவேக் – பாண்டு – நெல்லை சிவா – மாறன், பிரபல இயக்குநர்கள் எஸ்.பி.ஜனநாதன் – தாமிரா, பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான கே.வி.ஆனந்த், கன்னட நடிகர் புனித் ராஜ்குமார், பாடகி லதா மங்கேஷ்கர் என ரசிகர்களுக்கும், திரையுலக பிரபலங்களுக்குமே பிடித்தமான நபர்களின் இழப்பு அதிர்ச்சியளிக்கிறது.

இந்த சூழலில் இன்னொரு மரணச் செய்தி வந்திருக்கிறது. சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் சலீம் கவுஸ். இவர் தமிழில் ‘வெற்றி விழா, சின்னக் கவுண்டர், தர்மசீலன், திருடா திருடா, ரெட், தாஸ், சாணக்யா, வேட்டைக்காரன்’ போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகர் சலீம் கவுஸ் தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் ஹிந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். தற்போது, 70 வயதான நடிகர் சலீம் கவுஸ் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் என தகவல் கிடைத்துள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Share.