‘பீஸ்ட்’ ஷூட்டிங் ஸ்பாட்டில் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு விஜய்யுடன் நடனமாடிய இயக்குநர் நெல்சனின் மகன்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ மற்றும் இயக்குநர் வம்சி படம் என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘பீஸ்ட் திரைப்படம் நேற்று முன் தினம் (ஏப்ரல் 13-ஆம் தேதி) திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளில் ரிலீஸானது.

இந்த படத்தை ‘கோலமாவு கோகிலா, டாக்டர்’ புகழ் இயக்குநர் நெல்சன் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு ‘ராக்ஸ்டார்’ அனிருத் இசையமைத்துள்ளார், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். இதில் விஜய்-க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

vijay

மேலும், முக்கிய ரோல்களில் இயக்குநர் செல்வராகவன், VTV கணேஷ், அபர்ணா தாஸ், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ஷைன் டாம் சாக்கோ, சதீஷ் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் ‘மாஸ்டர்’ படத்தின் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு விஜய், சதீஷுடன் இணைந்து இயக்குநர் நெல்சனின் மகன் நடனமாடும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Share.