அக்னி சிறகுகள் டீசர் வெளியானது !

2013-ஆம் ஆண்டு வெளியான படம் மூடர் கூடம். இந்த படத்தை இயக்கி தமிழ் திரை உலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் நவீன். இவர் இயக்குனர் சிம்பு தேவன் மற்றும் இயக்குனர் பாண்டியராஜ் ஆகியோரின் துணை இயக்குனராக பணியாற்றி உள்ளார் . மூடர் கூடம் படம் நல்ல வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது . இந்த படத்தை இவர் கொளஞ்சி என்கிற படத்தை தயாரித்தார் .

Arun Vijay

இந்நிலையில் ஓவர் மூடர்கூடம் படத்திற்கு பிறகு இயக்கி உள்ள படம் அக்னி சிறகுகள் . இந்த படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்து இருக்கிறார் . எதிர்மறை நாயகனாக அருண் விஜய் நடித்து இருக்கிறார் . அக்ஷரா ஹாசன் நாயகியாக நடித்து இருக்கிறார் . நடராஜன் சங்கரன் இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார் . டி.சிவா இந்த படத்தை தயாரித்துள்ளார் . இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது .

நடிகர் சூர்யா இந்த படத்தின் டீசரை தனது சமூகவலைத்தளங்களில் வெளியீட்டு உள்ளார் . விரைவில் டிரைலர் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளனர் !

Share.