விஜய் தேவரகொண்டா வெளியிட்டுள்ள ஹரிஷ் கல்யாண் திரைப்படத்தின் போஸ்டர்!

2010 ஆம் ஆண்டு வெளியான “சிந்து சமவெளி” படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் ஹரீஷ் கல்யாண். தற்போது இவர் பிரபல இயக்குனரான சசி இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த ஹரீஷ் கல்யாண் 2018 ஆம் ஆண்டு இலன் இயக்கத்தில் வெளியான “பியார் பிரேமா காதல்” படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே நீங்காத இடத்தை பிடித்துள்ளார். அதுமட்டுமின்றி பிக்பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமும் ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றார்.

தற்போது தெலுங்கில் சூப்பர் ஹிட்டான பெல்லி சூபுளு திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானி சங்கர் இணைந்து நடித்துள்ளார்கள். இந்த படத்தின் டைட்டில் போஸ்டரை தற்போது விஜய் தேவரகொண்டா வெளியிட்டுள்ளார். கார்த்திக் சுந்தர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு “ஓ மனப் பெண்ணே” என்று டைட்டில் வைத்துள்ளார்கள்.

Share.