ராஷ்மிகாவை திருமணம் செய்துகொள்ளப்போகிறாரா விஜய் தேவரகொண்டா?… அவரே போட்ட ட்வீட்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவருக்கு அமைந்த முதல் கன்னட படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘கிரிக் பார்ட்டி’. அதன் பிறகு தெலுங்கில் இவருக்கு அமைந்த முதல் படமும் மெகா ஹிட்டானது. அது தான் ‘கீதா கோவிந்தம்’.

விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடித்த இப்படத்தில் ‘இன்கேம் இன்கேம்’ பாடல் தான் ராஷ்மிகா மந்தனாவை வேர்ல்ட் லெவலில் ஃபேமஸ் ஆக்கியது. ராஷ்மிகா தமிழில் அறிமுகமான முதல் படமே கார்த்தியுடன் தான். அது தான் ‘சுல்தான்’. சமீபத்தில் ராஷ்மிகா ஹீரோயினாக நடித்த ‘புஷ்பா’ முதல் பாகம் தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரிலீஸானது.

இப்போது, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் ஹிந்தியில் இரண்டு படங்களும், தெலுங்கில் இரண்டு படங்களும் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டாவை ராஷ்மிகா காதலித்து வருவதாகவும் மிக விரைவில் இவர்களின் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் தண்டோரா போடப்படுகிறது. தற்போது, இது தொடர்பாக விஜய் தேவரகொண்டா தனது ட்விட்டர் பக்கத்தில் “வழக்கம்போல முட்டாள்தனமான செய்தி” என்று குறிப்பிட்டு பரவும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

 

Share.