விஜய் தேவரகொண்டா – மைக் டைசன் இணைந்து நடித்துள்ள ‘லைகர்’… இத்தனை கோடி வசூலித்தால் தான் வெற்றிப்படமா?

தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. இப்போது இவர் நடிப்பில் ‘லைகர், குஷி, ஜன கண மன’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘லைகர்’ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸுக்காக விஜய் தேவரகொண்டாவின் ரசிகர்கள் பல மாதங்களாக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

கடந்த ஜூலை 21-ஆம் தேதி இப்படத்தின் ட்ரெய்லரை விஜய் தேவரகொண்டா தனது ட்விட்டர் பக்கத்தில் ரிலீஸ் செய்தார். இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் எகிற வைத்தது.

இப்படத்தினை பூரி ஜெகன்நாத் இயக்கியதுடன், ‘தர்மா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து தனது ‘பூரி கனெக்ட்ஸ்’ மூலம் தயாரித்துள்ளார். இதில் ஹீரோயினாக அனன்யா பாண்டே நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் மைக் டைசன், ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய் ஆகியோர் நடித்துள்ளனர்.

படத்தை தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வருகிற ஆகஸ்ட் 25-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். தற்போது, இப்படம் உலகளவில் ரூ.90 கோடி வசூலித்தால் தான் வெற்றிப்படமாகும் என்று தகவல் கிடைத்துள்ளது.

Share.