5 மொழிகளில் தயாராகும் ‘லைகர்’… ரிலீஸ் தேதியை ஃபிக்ஸ் செய்த விஜய் தேவரகொண்டா!

தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. ‘வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்’ படத்துக்கு பிறகு விஜய் தேவரகொண்டா நடிப்பில் ஜெட் ஸ்பீடில் தயாராகி கொண்டிருக்கும் படம் ‘லைகர்’. விஜய் தேவரகொண்டாவின் ரசிகர்கள் பல மாதங்களாக இப்படத்தின் ரிலீஸுக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், இன்று (பிப்ரவரி 11-ஆம் தேதி) இந்த படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் நடிகர் விஜய் தேவரகொண்டா. இப்படத்தை இந்த ஆண்டு (2021) செப்டம்பர் மாதம் 9-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் ரசிகர்கள் ஹேப்பி மோடுக்கு ஆக்டிவேட் ஆகியுள்ளனர்.

தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ள இந்த திரைப்படத்தில் அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய் நடித்து கொண்டிருக்கிறார்கள். இப்படத்தினை பூரி ஜெகன்நாத் இயக்கி வருவதுடன், ‘தர்மா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து தனது ‘பூரி கனெக்ட்ஸ்’ மூலம் தயாரித்தும் வருகிறார்.

Share.