பீஸ்ட் டிரெய்லர் மூலம் விஜய் செய்த சாதனை!

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் தான் விஜய் மற்றும் அஜித். இவங்க இரண்டு பேருக்கும் மிகப்பெரிய
ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இவர்கள் படத்திலிருந்து எந்த ஒரு அப்டேட் வந்தாலும் அது இணையத்தில் வைரலாவது சர்வ சாதாரணம்.

சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் வெற்றி பெற்றது.
இதனையடுத்து ஒடிடி தளத்தில் வெளியான
வலிமை திரைப்படம் இதுவரை 500 மில்லியன் நிமிடங்களுக்கு ரசிகர்களால் பார்க்கப்பட்டு
சாதனை செய்துள்ளது.

வலிமை படத்துக்கு முன்னதாக வெளியான வலிமை படத்தின் டிரெய்லரை இதுவரை 2.3 கோடி பார்வையாளர்கள் பார்த்து உள்ளனர்.

இந்த நிலையில நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் வருகின்ற ஏப்ரல் 13ம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் டிரெய்லரை பார்பதற்காக நீண்ட நாள் காத்திருந்தனர் விஜய் ரசிகர்கள்.

மிகவும் எதிர்பார்ப்புடன் ஏப்ரல் 2ம் தேதி வெளியான பீஸ்ட் டிரெய்லரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். விஜய், செல்வராகவன் , யோகிபாபு ஆகியோரின் நடிப்பில் வெளியான பீஸ்ட படத்தின் டிரெய்லரை 24 மணிநேரத்தில் 3.5 கோடி பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.

மூன்று மாதத்தில் நடிகர் அஜித்தின் வலிமை டிரெய்லர் செய்த சாதனையை பீஸ்ட் படத்தின் டிரெய்லர் ஒரே நாளில் வீழ்த்தி அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளனர் விஜய் ரசிகர்கள்.

Share.