இணையத்தில் மாஸ் காட்டும் விஜய் ரசிகர்கள் !

நடிகர் விஜய் நடிக்கும் அடுத்த படமான தளபதி 66 படத்தின் பூஜை சென்னையில் சில வாரங்களுக்கு முன்னர் நடந்தது . அதன் பிறகு படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் சில நாட்கள் நடந்தது . அதன் பிறகு படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து முடிந்துள்ளது.

இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்து வருகிறார் . தோழா படத்தை இயக்கிய இயக்குனர் வம்சி இந்த படத்தை இயக்கி வருகிறார் . மேலும் இந்த படத்தில் நடிகர்கள் சரத்குமார் , பிரகாஷ் ராஜ் , பிரபு , நடிகை ஜெயசுதா , நடிகை சங்கீதா மற்றும் பிக் பாஸ் புகழ் சம்யுக்தா ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியானது . முழுக்க முழுக்க குடும்ப படமாக இந்த படம் உருவாகி வருகிறது .

இசையமைப்பாளர் தமன் முதன் முதலாக விஜய் படத்திற்கு இசையமைக்கிறார் . பொதுவாக நடிகர் விஜய் நடிக்கும் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கும் எனவே தமன் இசை மீது அனைவரும் மிகவும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர் .

இந்நிலையில் தளபதி 66 படத்தின் தலைப்பு வாரிசு என்று விஜய்யின் பிறந்த நாளன்று படக்குழு அறிவித்தது. மேலும் வாரிசு படத்தின் முதல் மூன்று போஸ்டரையும் வெளியிட்டு இருந்தது . ஆனால் இந்த மூன்று போஸ்டர்களுக்கும் விஜய் ரசிகர்களிடம் பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை . இந்நிலையில் தற்போது விஜய் ரசிகர்கள் வாரிசு படத்திற்கு புதிது புதிதாக போஸ்டர்களை உருவாக்கி இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர் .

Share.