நெல்சனுக்கு ட்ரீட் வைத்த விஜய் !

நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் பீஸ்ட் .இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது . இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார் .கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது .

இந்த படத்திற்கு மிகப்பெரிய ஒபெனிங் கிடைத்துள்ளது ஆனால் படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்த காரணத்தினாலும் ,‘கே.ஜி.எஃப் 2 ” படத்தின் ஏற்பட்டுள்ள நல்ல வரவேற்பு காரணமாக இந்த படத்தின் வசூல் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியது .

மேலும் பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது .விஜய் ரசிகர்கள் பலரும் இந்த படத்தை கடுமையாக விமர்சித்தார்கள் . இந்நிலையில் இயக்குனர் நெல்சன் தற்போது ஒரு புகைப்படத்தை பகிர்ந்து நன்றியை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் .

அந்த பதிவில் நடிகர் விஜய் பீஸ்ட் படக்குழுவினருக்கு விருந்து அளித்துள்ளார் . அதற்கும் நன்றி தெரிவித்துள்ளார் மேலும் எப்பொழுதும் அன்பை ஆதரவை தருபவர் விஜய் என்று தெரிவித்துள்ளார் . மேலும் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் மற்றும் காவ்யா மாறன் ஆகியோருக்கும் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் விஜய் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார் நெல்சன் .

Share.