இயக்குநர் வம்சி படத்துக்காக ஹைதராபாத் சென்ற ‘தளபதி’ விஜய்… தீயாய் பரவும் வீடியோ!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘பீஸ்ட்’-ஐ நெல்சன் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்திருந்தது. இதில் விஜய்-க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார்.

இப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி ரிலீஸாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ‘பீஸ்ட்’-ஐ தொடர்ந்து விஜய்-யின் 66-வது படத்தை ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் தில் ராஜு தயாரிக்கிறார்.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் இப்படத்தினை ‘தோழா’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் வம்சி இயக்குகிறார். இதில் விஜய்-க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும், மிக முக்கிய ரோலில் சரத்குமார் நடிக்கிறாராம். இதற்கு தமன் இசையமைக்கிறார்.

இதன் முதல் ஷெட்யூல் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவு பெற்றது. தற்போது, இன்று (மே 3-ஆம் தேதி) முதல் ஆரம்பமாகும் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக விஜய் ஹைதராபாத் சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட விஜய்யின் வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Share.