ரஜினி இடத்தில் விஜய்யா ?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்பொழுது விக்ரம் படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறார் . இந்த படம் வருகின்ற ஜூன் மாதம் 3-ஆம் தேதி வெளியாக இருக்கிறது . கமல்ஹாசன் , விஜய் சேதுபதி , ஃபகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர் . இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார் .

இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யை வைத்து அவரது 67-வது படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது . இந்த படத்தை தயாரிப்பாளர் லலித் தயாரிக்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது . வருகின்ற அக்டோபர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது .

முன்னதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு ஒரு கதை சொல்லி இருந்தார் . அந்த படத்தை கமல்ஹாசன் அவரது ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிப்பதாக இருந்தது . ஆனால் சில காரணங்களால் அந்த படம் தொடங்காமல் போனது . இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்திடம் சொன்ன கதையை தான் நடிகர் விஜயை வைத்து எடுக்க போகிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது .

Share.