விஜய்யை பார்த்து வியந்த ஆந்திரா !

நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் பீஸ்ட் . இந்த படம் கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியானது . படம் வெளியான பின் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது . இந்நிலையில் நடிகர் விஜய் நடிக்கும் அடுத்த படமான தளபதி 66 படத்தின் பூஜை சென்னையில் சமீபத்தில் நடந்தது .

இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்க வருகிறார் . இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார் . பாடலாசிரியர் விவேக் இந்த படத்திற்கு வசனம் எழுதுகிறார் . தோழா படத்தை இயக்கிய இயக்குனர் வம்சி இந்த படத்தை இயக்குகிறார் .

மேலும் இந்த படத்தில் நடிகர்கள் சரத்குமார் , பிரகாஷ் ராஜ் , பிரபு , நடிகை ஜெயசுதா ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது . மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது . இந்நிலையில் நடிகர் விஜய் படப்பிடிப்பின் பொழுது கேரவனுக்கு போகாமல் படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் இருப்பதை பார்த்த பலர் ஆச்சர்ய பட்டுள்ளனர் . இவ்வளவு பெரிய நடிகர் கேரவனுக்கு போகாமல் அனைவருடன் அமர்ந்து இருப்பது அங்கு உள்ளவர்கள் அதிசியமுடன் பார்க்கிறார்கள் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது .

Share.