திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ‘தளபதி’ விஜய் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் சந்திப்பு… வைரலாகும் வீடியோ!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘மாஸ்டர்’ கடந்த ஆண்டு (2021) பொங்கல் ஸ்பெஷலாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தியில் ரிலீஸானது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.

விஜய்யின் புதிய படமான ‘பீஸ்ட்’-ஐ நெல்சன் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்துள்ளது. இதில் விஜய்-க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 13-ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. ‘பீஸ்ட்’-ஐ தொடர்ந்து விஜய்-யின் 66-வது படத்தை ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் தில் ராஜு தயாரிக்கிறார்.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாக உள்ள இப்படத்தினை ‘தோழா’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் வம்சி இயக்குகிறார். இதில் விஜய்-க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இதற்கு தமன் இசையமைக்கிறார். இதன் ஷூட்டிங் நேற்று (ஏப்ரல் 6-ஆம் தேதி) முதல் சென்னையில் பூஜையுடன் ஆரம்பமாகி பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நேற்று இரவு சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற ‘AGS எண்டர்டெயின்மெண்ட்’ கல்பாத்தி எஸ்.அகோரம் மகள் ஐஸ்வர்யாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்து கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. இவ்விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலினையும் விஜய் நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட ஸ்டில்ஸ் மற்றும் வீடியோஸ் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Share.