‘தளபதி’ விஜய்யை நேரில் சந்தித்து பேசிய இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா… வைரலாகும் ஸ்டில்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘மாஸ்டர்’ இந்த ஆண்டு (2021) பொங்கல் ஸ்பெஷலாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தியில் ரிலீஸானது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.

இதில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். தளபதிக்கு எதிரியாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். விஜய்யின் அடுத்த படமான ‘பீஸ்ட்’-ஐ நெல்சன் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்து வருகிறது. இதில் விஜய்-க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளதாம்.

‘பீஸ்ட்’-ஐ தொடர்ந்து விஜய்-யின் 66-வது படத்தை ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் தில் ராஜு தயாரிக்க உள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாக உள்ள இப்படத்தினை ‘தோழா’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் வம்சி இயக்க உள்ளார். இந்த படத்துக்கான ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், விஜய் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜாவை நேரில் சந்தித்து பேசியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை யுவனே, விஜய்யுடன் எடுத்துக்கொண்ட ஸ்டில்லை ஷேரிட்டு உறுதிபடுத்தியுள்ளார். இந்த ஸ்டில்லால் யுவன் விஜய்யின் புதிய படத்துக்கு இசையமைக்கப்போகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Share.