ஷூட்டிங் ஸ்பாட்டில் ‘தளபதி’ விஜய் – நடிகர் சூர்யா திடீர் சந்திப்பு… இருவரும் என்ன பேசிக்கிட்டாங்க தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் புதிய படமான ‘பீஸ்ட்’-ஐ நெல்சன் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்து வருகிறது. இந்த படத்துக்கு ‘ராக்ஸ்டார்’ அனிருத் இசையமைத்து வருகிறார், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்து வருகிறார். இதில் விஜய்-க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

மேலும், பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் இயக்குநர் செல்வராகவன் நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் நேற்று (நவம்பர் 9-ஆம் தேதி) சன் ஸ்டுடியோவில் நடந்து வந்தது. இதே ஸ்டுடியோவில் ‘சன் பிக்சர்ஸ்’ தயாரிக்கும் இன்னொரு படமான ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் ஷூட்டிங்கும் நடந்திருக்கிறது. பாண்டிராஜ் இயக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் ஹீரோவாக சூர்யா நடிக்கிறார்.

நேற்று சன் ஸ்டுடியோவில் நடிகர்கள் விஜய் – சூர்யா இருவரும் நேரில் சந்தித்து பேசிக் கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த சந்திப்பின் போது விஜய் சூர்யாவிடம், ‘ஜெய் பீம்’ படம் குறித்து பாராட்டி பேசியிருக்கிறார். பின், சூர்யா விஜய்யிடம், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ‘விஜய் மக்கள் இயக்கம்’ சார்பில் போட்டியிட்டு வென்றவர்களை பாராட்டி பேசியிருக்கிறார்.

Share.