மணிரத்னம் படத்தை தவற விட்ட விஜய் !

இந்திய சினிமாவின் முக்கியமான தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் செக்க சிவந்த வானம் . இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம்
பொன்னியின் செல்வன் படத்தை இயக்க போவதாக அறிவித்தார் . கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்ற நாவலை தழுவி இந்த படம் உருவாகி வருகிறது .

இந்த படத்தில் விக்ரம் ,கார்த்தி ,ஜெயம் ரவி , ஐஸ்வர்யா ராய்,த்ரிஷா என பல சினிமா நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் . இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளது . இந்நிலையில் மற்ற பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது . இந்த படத்திற்கு A.R.ரகுமான் இசையமைத்து வருகிறார் . தமிழ் ரசிகர்கள் மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது .


இந்நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் படக்குழு படத்தின் விளம்பர படுத்தும் பணிகளை துவங்கி உள்ளது அந்த வகையில் படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் வெளியாகி இருந்தது. இவை இரண்டும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை ரசிகர்களிடம் பெற்று இருக்கிறது .இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் ஆடியோ லான்ச் செப்டம்பர் 6-ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இயக்குனர் மணிரத்னம் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் முதலில் நடிகர் விஜய்யை நடிக்க வைக்க முயன்றார் . 2010 -ல் பொன்னியின் செல்வன் தொடங்குவதாக இருந்தது ஆனால் பட்ஜெட் பிரச்சனை காரணமாக அந்த படம் அப்பொழுது தொடங்காமல் போனது . தற்போது வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ளார் .

Share.