2021-யில் ட்விட்டரில் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட ஹேஷ்டேக்கின் டாப் 10 லிஸ்டில் இடம்பிடித்த விஜய் படம்!

இந்த ஆண்டு (2021) இந்திய அளவில் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட ஹேஷ்டேக்கின் டாப் 10 லிஸ்டை ட்விட்டர் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த லிஸ்டில் ‘மாஸ்டர்’ படம் தான் எட்டாவது இடத்தில் இருக்கிறது. அதுவும் லிஸ்டில் இடம்பெற்ற ஒரே படம் ‘மாஸ்டர்’ மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது. கோலிவுட்டில் டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய் நடித்து இந்த ஆண்டு பொங்கல் ஸ்பெஷலாக திரையரங்குகளில் ரிலீஸான ‘மாஸ்டர்’ படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.

இதில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். தளபதிக்கு எதிரியாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். இப்படம் சூப்பர் ஹிட்டானது. இதுமட்டுமின்றி, ‘மாஸ்டர்’ படத்துக்கு பிறகு விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ட்வீட் தான் அதிகமாக ரீ-ட்வீட் செய்யப்பட்ட பதிவு என்றும், இது தான் அதிக லைக்ஸ் பெற்ற போஸ்ட் என்றும் ட்விட்டர் நிறுவனம் அறிவித்திருக்கிறது.

‘பீஸ்ட்’-ஐ நெல்சன் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்து வருகிறது. இந்த படத்துக்கு ‘ராக்ஸ்டார்’ அனிருத் இசையமைத்து வருகிறார், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்து வருகிறார். இதில் விஜய்-க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மேலும், பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் இயக்குநர் செல்வராகவன் நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது.

 

Share.