‘தளபதி’ விஜய் நடிக்காமல் மிஸ் பண்ண 6 மெகா ஹிட் தமிழ் படங்கள்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘பிகில்’ 2019-ஆம் ஆண்டு வெளியாகி மாஸ் ஹிட்டானது. இவர் நடித்திருக்கும் புதிய படமான ‘மாஸ்டர்’ கடந்த ஜனவரி மாதம் 13-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்திலும், கடந்த ஜனவரி 14-ஆம் தேதி ஹிந்தியிலும் (விஜய் தி மாஸ்டர்) ரிலீஸானது.

இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளாராம். விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 65’யை நெல்சன் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரிக்க உள்ளது. இதில் விஜய்யுடன் டூயட் ஆடி பாடப்போவது பூஜா ஹெக்டே என்று சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கான ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. ஷூட்டிங்கை வருகிற ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரத்தில் இருந்து ரஷ்யாவில் ஆரம்பிக்க ப்ளான் போட்டுள்ளனர். தற்போது, நடிகர் விஜய் நடிக்காமல் மிஸ் செய்து, பின் வேறு ஒரு நடிகர் நடித்து ரிலீஸாகி சூப்பர் ஹிட்டான தமிழ் படங்களின் லிஸ்டை பார்ப்போம்…

1.சண்டக்கோழி :

இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க இயக்குநர் லிங்குசாமியின் முதல் சாய்ஸாக இருந்தது சூர்யாவாம். சூர்யாவை தொடர்ந்து விஜய்யிடம் பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறார் லிங்குசாமி. ஆனால், படத்தின் இரண்டாம் பாதியில் ஹீரோவின் அப்பா கேரக்டரான ராஜ்கிரணுக்கு அதிக ஸ்கோப் இருந்ததால், விஜய் நடிக்க மறுத்து விட்டாராம். அதன் பிறகு விஷால் ஹீரோவாக நடித்து இப்படம் மெகா ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

2.ஆட்டோகிராஃப் :

இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க இயக்குநர் சேரன் பல முன்னணி நடிகர்களை அணுகியிருந்தார். அந்த லிஸ்டில் ‘தளபதி’ விஜய்யும் உண்டு. ஆனால், அனைவரும் ரெட் சிக்னல் கொடுத்து விட்டனர். பின், சேரனே கதையின் நாயகனாக நடித்து, இயக்கிய இப்படம் மெகா ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

3.ரன் :

இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க இயக்குநர் லிங்குசாமியின் முதல் சாய்ஸாக இருந்தது விஜய் தானாம். ஆனால், சில காரணங்களால் விஜய் ரெட் சிக்னல் கொடுத்து விட்டார். அதன் பிறகு மாதவன் ஹீரோவாக நடித்த இப்படம் மெகா ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

4.அனேகன் :

இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க இயக்குநர் கே.வி.ஆனந்தின் முதல் சாய்ஸாக இருந்தது விஜய் தானாம். விஜய்-க்கு இக்கதையும் மிகவும் பிடித்து விட்டதாம். ஆனால், அப்போது ‘ஜில்லா, கத்தி’ என அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க விஜய் கால்ஷீட் கொடுத்திருந்ததால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம். பின், விஜய் தான் கே.வி.ஆனந்திடம், இக்கதை நடிகர் தனுஷுக்கு பொருத்தமாக இருக்கும் என்று சொல்லியிருக்கிறார். அதன் பிறகு தனுஷ் ஹீரோவாக நடித்த இப்படம் மெகா ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

5.சிங்கம் :

இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க இயக்குநர் ஹரியின் முதல் சாய்ஸாக இருந்தது விஜய் தானாம். ஆனால், சில காரணங்களால் விஜய் ரெட் சிக்னல் கொடுத்து விட்டார். அதன் பிறகு சூர்யா ஹீரோவாக நடித்த இப்படம் மெகா ஹிட்டானது. மேலும், அடுத்தடுத்து இப்டத்தின் பார்ட் 2 மற்றும் பார்ட் 3-யும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

6.முதல்வன் :

இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க இயக்குநர் ஷங்கரின் முதல் சாய்ஸாக இருந்தது ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தாம். ரஜினி மறுத்ததும் அவரை தொடர்ந்து விஜய்யிடம் பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறார் ஷங்கர். ஆனால், இது அரசியல் சார்ந்த படம் என்பதால் விஜய் நடிக்க மறுத்து விட்டாராம். அதன் பிறகு ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் ஹீரோவாக நடித்து இப்படம் மெகா ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

Share.