நடிகர் விஜய் வைத்த கோரிக்கை!

நடிகர் விஜய் இயக்கத்தில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான படம் பீஸ்ட் . இந்த படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது .இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தனது 66வது படத்தில் நடித்து வருகிறார் விஜய் .

இந்த படத்தின் படப்பிடிப்பை ஹைதராபாதில் வைத்து எடுக்கலாம் என்று முதலில் தயாரிப்பாளர் தில் ராஜு முடிவு செய்துள்ளார் . ஆனால் நடிகர் விஜய் தயாரிப்பாளருக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளார் .பெப்சி தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் இப்படத்தின் படப்பிடிப்புகளை தமிழகத்தில் நடத்த வேண்டும் என கோரிக்கை வைக்க அவரது கோரிக்கையை படக்குழுவும் ஏற்றுக் கொண்டுள்ளது. எனவே நடிக்கும் அவரது 66 வது படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலான பகுதி சென்னையில் தான் நடக்க இருக்கிறது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது .

இந்நிலையில் தமிழ் சினிமாவின் மற்றொரு முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித்தின் பெரும்பாலான படங்களின் படப்பிடிப்பு தொடர்ந்து ஹைதராபாதில் தான் நடந்து வருகிறது . இதனால் பலரும் இது பற்றி சமூக வலைதளங்களில் தொடர்ந்து விவாதித்து வருகின்றனர் .

Share.