சர்ச்சையை ஏற்படுத்திய பிரபல வெப் சீரிஸின் 3-வது சீசனில் நடிக்கும் விஜய் சேதுபதி!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயினாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற தமிழ் படமும், ‘சகுந்தலம்’ என்ற தெலுங்கு படமும், ‘தி ஃபேமிலி மேன்’ (சீசன் 2) என்ற ஹிந்தி வெப் சீரிஸும் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘தி ஃபேமிலி மேன் 2’ வெப் சீரிஸ் கடந்த ஜூன் 4-ஆம் தேதி ‘அமேசான் ப்ரைம்’யில் ரிலீஸானது.

மனோஜ் பாஜ்பாய் ஹீரோவாக நடித்துள்ள இந்த சீரிஸில் சமந்தா பவர்ஃபுல்லான வில்லி ரோலில் மிரட்டியிருக்கிறார். மேலும், மிக முக்கிய ரோல்களில் ப்ரியாமணி, ஷாரிப் ஹாஸ்மி, சரத் ஹெல்கர், பவன் சோப்ரா, தேவதர்ஷினி, மைம் கோபி, அழகம் பெருமாள், விபின் ஷர்மா, உதய் மகேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதனை இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கி உள்ளனர்.

தமிழர்களுக்கெதிரான இந்த வெப் சீரிஸின் ஒளிபரப்பை உடனடியாக நிறுத்த வேண்டுமென இயக்குநர்கள் சீமான், சேரன், ராம்குமார், பாரதிராஜா போன்ற பலர் ட்விட்டரில் தெரிவித்த வண்ணமுள்ளனர். இருப்பினும் ‘தி ஃபேமிலி மேன்’ டீம் மூன்றாவது சீசனுக்கான பணிகளை ஆரம்பித்து விட்டனர். தற்போது, ‘தி ஃபேமிலி மேன் 3’யில் மிக முக்கிய ரோலில் நடிக்க ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

Share.