விஜய் சேதுபதி – தமன்னா தொகுத்து வழங்கப்போகும் ‘மாஸ்டர் செஃப்’… வெளியானது புது ப்ரோமோ!

சினிமாவில் ஜெயிக்க கடின உழைப்பும், திறமையும் இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் சாதித்து மாஸ் காட்டலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவரது ரசிகர்கள் ‘மக்கள் செல்வன்’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள்.

இப்போது, ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் 13 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியை போன்று சன் டிவியில் ‘மாஸ்டர் செஃப்’ என்ற புதிய நிகழ்ச்சியை ஆரம்பிக்க உள்ளனர். அந்த நிகழ்ச்சியை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கப் போகிறாராம்.

இதற்காக விஜய் சேதுபதிக்கு ஒரு வாரத்திற்கு ரூ.3 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். இந்த நிகழ்ச்சி வருகிற ஆகஸ்ட் 7-ஆம் தேதி முதல் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகுமாம். இதன் புது ப்ரோமோ வீடியோ இன்று வெளியாகியுள்ளது. இந்நிகழ்ச்சியின் தெலுங்கு வெர்ஷனை ‘ஜெமினி டிவி’யில் நடிகை தமன்னா தொகுத்து வழங்கப்போவது குறிப்பிடத்தக்கது.

Share.