விஜய் சேதுபதிக்கு தேசிய விருது… ஷூட்டிங் ஸ்பாட்டில் கேக் வெட்டி கொண்டாட்டம்!

சினிமாவில் ஜெயிக்க கடின உழைப்பும், திறமையும் இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் சாதித்து மாஸ் காட்டலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவரது ரசிகர்கள் ‘மக்கள் செல்வன்’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். இப்போது, ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் 15 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் இயக்குநர் பொன்ராம் இயக்கும் படம் விஜய் சேதுபதியின் கேரியரில் 46-வது படம். இந்த படத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்யப் போகிறாராம். இப்படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்க, டி.இமான் இசையமைத்து வருகிறார்.

நேற்று (மார்ச் 22-ஆம் தேதி) மாலை விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடித்ததற்காக என அறிவிக்கப்பட்டது. இதனால் அவரது ரசிகர்கள் ஹேப்பி மோடுக்கு ஆக்டிவேட் ஆனார்கள். பொன்ராம் பட ஷூட்டிங் ஸ்பாட்டில் நடித்து வந்த விஜய் சேதுபதியை அப்படக்குழுவினர் தேசிய விருது பெற்றதுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

Share.