‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சியின் ஷூட்டிங் ஸ்பாட்டில் சூப்பராக நடனமாடி அசத்திய விஜய் சேதுபதி!

சினிமாவில் ஜெயிக்க கடின உழைப்பும், திறமையும் இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் சாதித்து மாஸ் காட்டலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவரது ரசிகர்கள் ‘மக்கள் செல்வன்’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். திரையுலகில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் என்ட்ரியான விஜய் சேதுபதிக்கு ஆரம்பத்தில் சின்ன ரோல் தான் ‘புதுப்பேட்டை. லீ, நான் மகான் அல்ல’ போன்ற சில படங்களில் கிடைத்தது.

அதன் பிறகு ‘தென்மேற்குப் பருவக்காற்று’ என்ற திரைப்படம் தான் விஜய் சேதுபதியை கதையின் நாயகனாக அவதாரம் எடுக்க வைத்து அழகு பார்த்தது தமிழ் சினிமா. ‘தென்மேற்குப் பருவக்காற்று’ படத்துக்கு பிறகு விஜய் சேதுபதி ஹீரோவாக வலம் வந்த ‘பீட்சா, நடவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும்’ ஆகிய மூன்று படங்களும் தான் வேற லெவலில் ஹிட்டாகி, இந்த மக்கள் செல்வனின் நடிப்புக்கு லைக்ஸ் போட வைத்தது. இதனையடுத்து ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதிக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது.

Vijay Sethupathi Dancing At Master Chef Tv Show Spot1

இப்போது, ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் 13 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியை போன்று சன் டிவியில் ‘மாஸ்டர் செஃப்’ என்ற புதிய நிகழ்ச்சியை ஆரம்பிக்க உள்ளனர். அந்த நிகழ்ச்சியை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கப் போகிறாராம். இதற்காக விஜய் சேதுபதிக்கு ஒரு வாரத்திற்கு ரூ.3 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். தற்போது, இந்நிகழ்ச்சியின் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் சேதுபதி சூப்பராக நடனமாடி அசத்திய வீடியோ வெளியாகி உள்ளது.

Share.