‘கொரோனா’ தடுப்பு பணிகளுக்காக நிதியுதவி வழங்கிய ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி!

சினிமாவில் ஜெயிக்க கடின உழைப்பும், திறமையும் இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் சாதித்து மாஸ் காட்டலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவரது ரசிகர்கள் ‘மக்கள் செல்வன்’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். இப்போது, ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் 15 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

கொரோனா நோயின் இரண்டாவது அலை தாக்கம் இப்போது அதிகமாக இருப்பதால், மக்கள் பொருளாதாரம் இழந்து, உற்றார் உறவினர் உயிர் இழந்து, நோய் பற்றிய பீதியிலும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்து இருக்கின்றனர். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மே 11-ஆம் தேதி அவரது ட்விட்டர் பக்கத்தில் “#COVIDSecondWave-க்கு எதிரான போரில் நாம் அனைவரும் சேர்ந்து போரிட வேண்டிய நேரம் இது.

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கிடுவீர்! பேரிடர் காலத்தில் பெறப்படும் நிதி கொரோனா தடுப்புக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் .நன்கொடை – செலவினங்கள் பொதுவெளியில் வெளியிடப்படும்” என்று கூறியிருந்தார். தற்போது, கொரோனா தடுப்பு பணிகளுக்காக நடிகர் விஜய் சேதுபதி ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Share.