சினிமாவிற்கு திடீர் ஓய்வு கொடுத்த விஜய் சேதுபதி !

தமிழ் சினிமாவில் பல வித்தியாசமான கதாபாத்திரங்கள் மற்றும் கதைகளில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல நடிகர் என்ற பெயரை எடுத்தவர் நடிகர் விஜய் சேதுபதி . தென்மேற்கு பருவக்காற்று என்கிற படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார் . அதற்கு முன்பாக பல படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார் .

தென்மேற்கு பருவக்காற்று படத்திற்கு பிறகு பிட்சா, சூது கவ்வும் , நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும் என்கிற தொடர்ந்த அடுத்து அடுத்து வெற்றி படங்களில் நடித்தார் . தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து நட்சத்திர நடிகர் ஆனார் . அதன் பிறகு ரஜினி , விஜய் போன்ற நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்தார் . மேலும் தெலுங்கு , ஹிந்தி , போன்ற படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார் .

ஒரு வருடத்திற்கு கிட்டத்தட்ட 10 படங்கள் நடிக்க தொடங்கினர் . இதனால் தொடர்ந்து இவர் படங்கள் திரைக்கு வர தொடங்கினர் . இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி ஒரு முடி எடுத்து உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது . தொடர்ந்து இவர் படம் வெளியாகி வருவதால் மக்களுக்கு சலிப்பு தட்டி உள்ளதாக நினைத்து உள்ளார் .

இந்நிலையில் சிறிது காலம் எந்த படத்திலும் நடிக்க போவதில்லை என்று முடிவெடுத்துள்ளார் . சிறிது காலம் ஓய்வு எடுக்க உள்ளார் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது . நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் விக்ரம் , மாமனிதன் , விடுதலை போன்ற படங்கள் இந்த ஆண்டு திரைக்கு வர இருக்கிறது குறிப்பிடத்தக்கது .

Share.