விஜய் சேதுபதி படத்தில் அந்த மாதிரி ஒரு வேலையை பார்த்த பிரபல இசையமைப்பாளர்… கதறி அழும் இயக்குநர்!

சினிமாவில் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் யுவன் ஷங்கர் ராஜா. இவர் இசையமைப்பாளராக அறிமுகமான முதல் படத்தின் பாடல்களே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘அரவிந்தன்’. அதன் பிறகு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து பல முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களிடம் லைக்ஸ் குவித்தார்.

யுவன் ஷங்கர் ராஜா தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழி படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார். கடைசியாக இவர் இசையமைத்து OTT தளத்தில் ரிலீஸான படம் ‘டிக்கிலோனா’. இப்போது தமிழில் ‘பிக் பாஸ் 4’ ரியோ ராஜின் ‘பிளான் பண்ணி பண்ணனும்’, ‘தல’ அஜித்தின் ‘வலிமை’, விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’, சிலம்பரசனின் ‘மாநாடு’, தனுஷின் ‘நானே வருவேன்’, அதர்வாவின் ‘குருதி ஆட்டம்’, விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’, கார்த்தியின் ‘விருமன்’ ஆகிய படங்களுக்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து கொண்டிருக்கிறார்.

இதில் ‘மாமனிதன்’ படத்துக்கு தனது அப்பா ‘இசைஞானி’ இளையராஜாவுடன் இணைந்து இசையமைத்து வருவதோடு, இப்படத்தை தயாரித்தும் வருகிறார் யுவன் ஷங்கர் ராஜா. இயக்குநர் சீனு ராமசாமி இயக்கியுள்ள இப்படத்தில் பணியாற்றியவர்களுக்கு சம்பள பாக்கி இருப்பதால் இந்த படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்தும் இன்னும் ரிலீஸாகாமல் இருக்கிறது.

இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளரும், இசையமைப்பாளருமான யுவன் ஷங்கர் ராஜா இயக்குநரிடம் அனுமதி பெறாமலே, படத்தில் இருந்து இரண்டு பாடல்களை நீக்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும், புதிதாக ஒரு எடிட்டரை வைத்து படத்தையும் யுவன் நினைத்தபடி எடிட் செய்து கதையே மாறி விட்டதாம். இதனை கேள்விப்பட்ட இயக்குநர் சீனு ராமசாமி மிகவும் வருத்தத்தில் இருக்கிறாராம். யுவனை சந்திக்க அவரது ஸ்டுடியோவிற்கு சீனு ராமசாமி சென்றாலும், அவரை பார்க்காமல் வெளியே காக்க வைக்கிறார்களாம்.

Share.