பாதியிலே ஹச் .வினோத் போட்ட புதிய திட்டம் !

தமிழ் சினிமாவில் பல வித்தியாசமான கதாபாத்திரங்கள் மற்றும் கதைகளில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல நடிகர் என்ற பெயரை எடுத்தவர் நடிகர் விஜய் சேதுபதி . தென்மேற்கு பருவக்காற்று என்கிற படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார் . அதற்கு முன்பாக பல படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார் .

தென்மேற்கு பருவக்காற்று படத்திற்கு பிறகு பிட்சா, சூது கவ்வும் , நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும் என்கிற தொடர்ந்த அடுத்து அடுத்து வெற்றி படங்களில் நடித்தார் . தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து நட்சத்திர நடிகர் ஆனார் . அதன் பிறகு ரஜினி , விஜய் போன்ற நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்தார் . மேலும் தெலுங்கு , ஹிந்தி , போன்ற படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார் .

இவர் வில்லனாக நடித்த படம் அனைத்தும் மிக வெற்றி படங்களாக அமைந்தது . சமீபத்தில் இவர் வில்லனாக நடித்த விக்ரம் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது . இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி இயக்குனர் ஹச்.வினோத் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

ஹச்.வினோத் தற்பொழுது நடிகர் அஜித்தை வைத்து ஒரு படம் இயக்கி வருகிறார் .ஆனால் சில காரணங்களால் அவரால் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்த முடியவில்லை . அதற்கு சரியான காரணம் என்னவென்று இதுவரை வெளிவரவில்லை . நடிகர் அஜித் தற்போது பைக் எடுத்துக்கொண்டு ட்ரிப் சென்றுள்ளார் . இந்த இடைவெளியில் இயக்குனர் ஹச்.வினோத் அடுத்து விஜய் சேதுபதியை வைத்து இயக்கும் படத்தின் வேலையை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளார் ஆனால் நடிகர் விஜய்சேதுபதி அஜித்துடன் இணைந்து பணியாற்றி வரும் படத்தை முழுவதும் முடித்த பின்னர் படத்தை தொடங்கலாம் என்று கூறியுள்ளார் .

Share.