விஜய் சேதுபதி சம்பளம் இத்தனை கோடியா ?

‘நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியான படம் புஷ்பா . இந்த படத்தை இயக்கி இருந்தவர் இயக்குனர் சுகுமார் . நடிகை ராஷ்மிகா இந்த படத்தில் நாயகியாக நடித்து இருந்தார் . தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் மிக பெரிய வெற்றியை பெற்றது . மேலும் படம் ஹிந்தி , தமிழ் . தெலுங்கு என வெளியான அனைத்து மொழிகளிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது . இந்த படத்தின் இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது என்று எதிர்பார்த்த நிலையில் புஷ்பா படத்தின் இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போக இருக்கிறது .

புஷ்பா படத்தின் முதல் பாகத்தை 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுத்தார்கள். இரண்டாம் பாகத்தை 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்க திட்டமிட்டு இருக்கிறார்கள் . புஷ்பா படத்தின் முதல் பாகத்தை விடவும் இரண்டாம் பாகத்தின் வசூல் அதிகமாக இருக்க வேண்டும் என்பதுதான் அதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது .இரண்டாம் பாகத்தில் அல்லு அர்ஜுன், பகத் பாசில் இடையிலான மோதல் அதிகமாக இருக்கும்படி முதலில் திட்டமிட்டிருந்தார்களாம். இப்போது ஹிந்தி நடிகர் ஒருவரையும் கூடுதலாகச் சேர்க்கலாமா என யோசிக்கிறாராம் இயக்குனர்.


இதற்காக புஷ்பா படத்தின் இரண்டாவது கதையில் சில மாற்றங்களைச் செய்து எழுதி வருகிறாராம் இயக்குனர் சுகுமார். அது திருப்திகரமாக வந்த பிறகே படப்பிடிப்பு ஆரம்பம் என்கிறார்கள். எனவே, படம் 2023ல் திரைக்கு வருவது சற்று எளிதல்ல என்றும் 2024-ஆம் தொடக்கத்தில் படம் வெளியாகும் என்ற தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க படக்குழு
முயன்று வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது . போலீஸ் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியை நடிக்கலாம் என்று கூறப்படுகிறது . இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதிக்கு சம்பளமாக 25 கோடி ரூபாய் பேசப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது .

Share.