விஜய் சேதுபதி – சந்தீப் கிஷன் இணைந்து நடிக்கும் ‘மைக்கேல்’… ரிலீஸானது மிரட்டலான டைட்டில் லுக்!

சினிமாவில் ஜெயிக்க கடின உழைப்பும், திறமையும் இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் சாதித்து மாஸ் காட்டலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவரது ரசிகர்கள் ‘மக்கள் செல்வன்’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். இப்போது, ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் பல படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்துக்கு ‘மைக்கேல்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியுடன் இணைந்து சந்தீப் கிஷனும் நடிக்கிறாராம். இப்படத்தை ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கி வருகிறாராம்.

இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் உருவாகி வருகிறதாம். இதனை ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் LLP – கரண் C புரொடக்ஷன்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறது. இன்று இதன் மிரட்டலான டைட்டில் லுக் போஸ்டரை ரிலீஸ் செய்துள்ளனர்.

Share.