விஜய் சாரின் ‘மாஸ்டர்’ மாஸ்டர்பீஸ் தான்… விஜய் சேதுபதி சொன்ன சூப்பரான தகவல்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘பிகில்’ கடந்த ஆண்டு வெளியாகி மாஸ் ஹிட்டானது. இவர் நடித்திருக்கும் புதிய படமான ‘மாஸ்டர்’ ரிலீஸுக்கு வெயிட்டிங் லிஸ்டில் உள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளாராம்.

இதில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். தளபதிக்கு எதிரியாக விஜய் சேதுபதி நடித்துள்ளாராம். ‘கொரோனா’ பிரச்சனையால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. இப்பிரச்சனை முடிந்தவுடன் ரிலீஸ் தேதியை ஃபிக்ஸ் செய்து கொள்ளலாம் என காத்துக் கொண்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

இந்நிலையில், ‘மாஸ்டர்’ திரைப்படம் தொடர்பாக ‘மக்கள் செல்வன்’ நடிகர் விஜய் சேதுபதி மீடியாவுக்கு கொடுத்த ஒரு பேட்டியில் “நான் இதுல வர்ற வில்லன் கேரக்டரை ரொம்ப ரசிச்சு பண்ணேன். விஜய் சார்கூட நான் நடிச்சு வரும்போது ஒரு எதிர்பார்ப்பு உங்க மைண்ட்ல ஒன்னு இருக்கும் இல்லையா, அதை முழுக்க முழுக்க satisfy பண்ணக் கூடிய படம். நல்லா வந்திருக்கு. ‘மாஸ்டர்’ மாஸ்டர்பீஸ் தான்” என்று கூறியுள்ளார்.

Share.