விஜய் சேதுபதி – சீனு ராமசாமி கூட்டணியில் உருவாகியுள்ள ‘மாமனிதன்’… எதிர்பார்ப்பை எகிற வைத்த டீசர்!

சினிமாவில் ஜெயிக்க கடின உழைப்பும், திறமையும் இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் சாதித்து மாஸ் காட்டலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவரது ரசிகர்கள் ‘மக்கள் செல்வன்’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். இப்போது, ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் பல படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘மாமனிதன்’ என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசருக்காக விஜய் சேதுபதியின் ரசிகர்கள் பல மாதங்களாக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில், இன்று (டிசம்பர் 6-ஆம் தேதி) இந்த படத்தின் டீசரை விஜய் சேதுபதி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ரிலீஸ் செய்துள்ளார். இந்த ஃபர்ஸ்ட் லுக் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் எகிற வைத்துள்ளது. பாப்புலர் இயக்குநர் சீனு ராமசாமி இயக்கியிருக்கும் இந்த படத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காயத்ரி நடித்திருக்கிறார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா – ‘இசைஞானி’ இளையராஜா சேர்ந்து இசையமைத்திருக்கிறார்கள். மிக விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.