OTT-யில் ரிலீஸாகிறதா விஜய் சேதுபதி படம்?… விளக்கமளித்த தயாரிப்பு நிறுவனம்!
August 26, 2020 / 04:35 PM IST
|Follow Us
‘கொரோனா’ பிரச்சனையால் இப்போது திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது, திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. இதனால், தயாரிப்பாளர்கள் படங்களை நேரடியாக OTT-யில் ரிலீஸ் செய்து வருகிறார்கள். சமீபத்தில், ஜோதிகா நடித்துள்ள ‘பொன்மகள் வந்தாள்’, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘பெண்குயின்’, யோகி பாபு நடித்துள்ள ‘காக்டெய்ல்’, வரலக்ஷ்மி சரத்குமார் நடித்துள்ள ‘டேனி’, வைபவ் நடித்துள்ள ‘லாக்கப்’ ஆகிய தமிழ் படங்கள் OTT-யில் வெளி வந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ அக்டோபர் 30-ஆம் தேதி ‘அமேசான் ப்ரைம்’-யில் ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தற்போது, முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடித்துள்ள ‘க/பெ.ரணசிங்கம்’ என்ற படமும் OTT-யில் ரிலீஸாகப்போவதாக கோலிவுட்டில் தண்டோரா போடப்படுகிறது. இந்த படத்தின் டிஜிட்டல் ரைட்ஸை ‘ஜீ 5’ கைப்பற்றியிருப்பதாக சொல்லப்படுகிறது.
இது தொடர்பாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான ‘KJR ஸ்டுடியோஸ்’ ட்விட்டரில் “இந்த செய்தி உண்மையல்ல. நாங்கள் முன்னணி OTT நிறுவனங்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம். இன்னும் உறுதியாக எந்த நிறுவனத்திற்கு கொடுக்கிறோம் என்பது முடிவாகவில்லை. விரைவில் நாங்களே அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்” என்று கூறியுள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினாக நடித்துள்ள இந்த படத்தை இயக்குநர் பி.விருமாண்டி இயக்கியுள்ளாராம்.
UNTRUE. We’re in talks with all major OTT players but we haven’t zeroed in yet.