‘ராட்சசன்’ பார்ட் 2-வில் விஜய் சேதுபதி… படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா

ஒரு படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானால், அடுத்ததாக அந்த நடிகரின் படத்துக்கோ அல்லது அந்த படத்தை இயக்கிய இயக்குநரின் படத்துக்கோ ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அதைவிட பல மடங்கு எக்ஸ்பெக்டேஷன், அதே படத்தின் பார்ட் 2 உருவாகும்போது ரசிகர்களுக்கு இருக்கும். தமிழில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘ராட்சசன்’.

இந்த படம் தெலுங்கு மொழியிலும் ‘ராக்ஷஷுடு’ என்ற டைட்டிலில் ரீமேக் செய்யப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தெலுங்கு வெர்ஷனில் ஹீரோவாக பெல்லம்கொண்ட சாய் ஸ்ரீநிவாஸ் நடித்திருந்தார். இதனை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ரமேஷ் வர்மா இயக்கியிருந்தார்.

கடந்த ஜூலை மாதம் 13-ஆம் தேதி தெலுங்கு வெர்ஷனின் பார்ட் 2 குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தது. ‘ராக்ஷஷுடு’ பார்ட் 2-வையும் இயக்குநர் ரமேஷ் வர்மாவே இயக்க உள்ளாராம். இந்த படத்தில் ஹீரோவாக கோலிவுட்டில் டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் பட்ஜெட் ரூ.100 கோடி என்றும், ஷூட்டிங்கை லண்டனில் நடத்த ப்ளான் போட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

Share.