லிங்குசாமி – ராம் போதினேனி காம்போவில் உருவாகும் படம்… விஜய் சேதுபதியின் ரீல் மகள் தான் ஹீரோயின்!

தமிழ் சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் லிங்குசாமி. இவர் ‘ஆனந்தம், ரன், சண்டக்கோழி, பையா’ போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கியிருக்கிறார். லிங்குசாமி இயக்கிய கடைசி படமான ‘சண்டக்கோழி 2’ 2018-ஆம் ஆண்டு ரிலீஸானது. இதில் ஹீரோவாக விஷால் நடித்திருந்தார். சமீபத்தில், இயக்குநர் லிங்குசாமி இயக்க உள்ள புதிய படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தது.

இந்த படத்தில் டோலிவுட்டில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வரும் ராம் போதினேனி நடிக்க உள்ளாராம். இப்படம் நடிகர் ராம் போதினேனியின் கேரியரில் 19-வது படமாம். இது ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாக உள்ளதாம். இதனை ‘ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன்’ என்ற நிறுவனம் தயாரிக்க உள்ளதாம். கடந்த பிப்ரவரி 18-ஆம் தேதி இப்படத்திற்கு பூஜை போடப்பட்டது.

இப்போது, இந்த படத்துக்கான ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இதில் ராம் போதினேனிக்கு ஜோடியாக நடிக்க க்ரித்தி ஷெட்டி ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இவர் சமீபத்தில் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் ‘உப்பெனா’ என்ற தெலுங்கு படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களிடம் லைக்ஸ் குவித்தார். இப்படத்தில் க்ரித்தி ஷெட்டிக்கு அப்பாவாக வில்லன் ரோலில் விஜய் சேதுபதி மிரட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Share.