தியேட்டருக்கு நோ… நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகப்போகும் விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’!

சினிமாவில் ஜெயிக்க கடின உழைப்பும், திறமையும் இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் சாதித்து மாஸ் காட்டலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவரது ரசிகர்கள் ‘மக்கள் செல்வன்’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். இப்போது, ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் 13 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘துக்ளக் தர்பார்’ என்ற படத்தின் டீசரை சமீபத்தில் விஜய் சேதுபதி ட்விட்டரில் ரிலீஸ் செய்தார். இந்த டீசர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. படத்தில் மிக முக்கிய ரோல்களில் ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், பார்த்திபன், கருணாகரன், ‘பிக் பாஸ் 4’ மூலம் ஃபேமஸான சம்யுக்தா நடித்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த படத்தை அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்க, ‘7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ லலித் குமார் தயாரித்து கொண்டிருக்கிறார். கோவிந்த் வஸந்தா இசையமைத்து வரும் இதற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் வெளியிடாமல் நேரடியாக சன் டிவியில் வருகிற செப்டம்பர் 10-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும், அதே தினத்தன்று பிரபல OTT தளமான ‘நெட்ஃப்ளிக்ஸ்’-யிலும் இப்படம் ரிலீஸாகுமாம்.

Share.