‘பிகில்’ அட்லி, ‘மாஸ்டர்’ லோகேஷ் கனகராஜ், ‘பீஸ்ட்’ நெல்சன்… ‘தளபதி’ விஜய் க்ளிக்கிய சூப்பரான ஸ்டில்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘மாஸ்டர்’ கடந்த ஆண்டு (2021) பொங்கல் ஸ்பெஷலாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தியில் ரிலீஸானது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.

இதில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். தளபதிக்கு எதிரியாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். விஜய்யின் அடுத்த படமான ‘பீஸ்ட்’-ஐ நெல்சன் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்து வருகிறது. இதில் விஜய்-க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளதாம்.

‘பீஸ்ட்’-ஐ தொடர்ந்து விஜய்-யின் 66-வது படத்தை ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் தில் ராஜு தயாரிக்க உள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாக உள்ள இப்படத்தினை ‘தோழா’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் வம்சி இயக்க உள்ளார்.

இந்த படத்துக்கான ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இதன் ஷூட்டிங் வருகிற மார்ச் மாதத்தில் இருந்து ஆரம்பமாகவுள்ளது. படம் வருகிற தீபாவளி அல்லது அடுத்த ஆண்டு (2023) பொங்கலுக்கு ரிலீஸாகுமாம். இந்நிலையில், ‘மாஸ்டர்’ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ட்விட்டரில் ‘தெறி, மெர்சல், பிகில்’ படங்களின் இயக்குநர் அட்லி மற்றும் ‘பீஸ்ட்’ இயக்குநர் நெல்சனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும், இந்த ஸ்டில்லை எடுத்ததே நம்ம ‘தளபதி’ விஜய் தான் என்று லோகேஷ் கனகராஜ் குறிப்பிட்டுள்ளார்.

Share.