இவ்ளோ அழகை என்ன சொல்லி வர்ணிக்க?… புது போட்டோஷூட்டில் பேரழகாய் மின்னும் டிடி!

பாப்புலர் தொகுப்பாளினிகளில் ஒருவராக வலம் வருபவர் திவ்யதர்ஷினி. டிடி என்று செல்லமாக அழைக்கப்படும் இவரின் பேச்சுக்கு மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. திவ்யதர்ஷினி தொகுப்பாளினியாக மட்டுமில்லாமல் ‘சர்வம் தாள மயம், ப.பாண்டி’ ஆகிய தமிழ் படங்களில் நடிகையாக வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில், பாப்புலர் நடிகர்களில் ஒருவரான ஜீவா கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தில் நடிக்க திவ்யதர்ஷினி ஒப்பந்தமானார். ‘காபி வித் காதல்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சுந்தர்.சி இயக்கி கொண்டிருக்கிறார். இதில் ஸ்ரீகாந்த், மாளவிகா ஷர்மா, ஜெய், அம்ரிதா, ஐஸ்வர்யா தத்தா மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்தில் திவ்யதர்ஷினிக்கு மிக முக்கிய ரோலாம்.

2014-ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் டிடி. பின், ஸ்ரீகாந்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2017-ஆம் ஆண்டு சட்டப்பூர்வமாக டிடி விவாகரத்து பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், திவ்யதர்ஷினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புது போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸ் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

 

Share.