விஜய்க்கு ஆஸ்கர் விருது கிடைக்கும் – தயாரிப்பாளர் நம்பிக்கை

தென்னிந்திய சினிமாவின் தயாரிப்பாளராக இருப்பவர் அபிராமி ராமநாதன் . எழுத்தாளராகவும் இவர் சில படங்களில் பணியாற்றி இருக்கிறார் . உன்னோடு கா என்கிற படத்திற்கு இவர் எழுத்தாளராக இருந்து இருக்கிறார் . அபிராமி என்கிற தொலைக்காட்சி தொடரையும் இவர் தயாரித்துள்ளார் .தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதையும் இவர் பெற்றுள்ளார் . இமைக்கா நொடிகள் , சென்னை 600028 போன்ற படங்கள் வெளியாக இவர் முக்கிய பங்காற்றி உள்ளார் . இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய்யை இவர் கருத்து தெரிவித்துள்ளார் .

நடிகர் விஜய்யின் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் பீஸ்ட் . இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூல் பெற்று வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது . இந்நிலையில் விஜய்க்கு உழைப்பு மேல் நம்பிக்கை இருக்கு . அவர் படம் நல்லா இல்லாவிட்டாலும் மக்கள் ரசிக்கின்றனர் . ஆஸ்கருக்கு போகக்கூடிய அளவு அவருக்கு திறமை இருக்கு . விஜய்க்கு ஆஸ்கர் விருது கிடைத்தால் தமிழுக்கு பெருமை தானே என்று தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் விஜய் பொதுவாக ஹீரோயிசம் படங்களில் தான் விஜய் நடிப்பார் அவரது ரசிகர்களும் பெரும்பாலும் இதையே தான் விரும்புகிறார்கள் எனவே விஜய் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்தால் அவருக்கு ஆஸ்கர் உட்பட பல விருதுகள் கிடைக்கும் என்பது பொதுவான ரசிகர்ளின் கருத்தாக இருக்கிறது .

Share.