#BOYCOTTLAALSINGHCHADDHA… நடிகர் அமீர் கானுக்கு எதிராக ட்வீட் போட்ட நடிகை விஜயசாந்தி!

பாலிவுட்டில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் அமீர் கான். இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய ஹிந்தி படம் ‘லால் சிங் சத்தா’. இந்த படத்தை அத்வைத் சந்தன் இயக்க, ஹீரோயினாக கரீனா கபூர் நடித்துள்ளார்.

மேலும், மிக முக்கிய ரோலில் நாகசைத்தன்யா நடித்துள்ளார். இந்த படத்தை வருகிற ஆகஸ்ட் 11-ஆம் தேதி ஹிந்தி மொழி மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

இந்நிலையில், சமூக வலைத்தளமான ட்விட்டரில் “#BOYCOTTLAALSINGHCHADDHA” என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. இது தொடர்பாக அமீர் கான் மீடியாவுக்கு கொடுத்த ஒரு பேட்டியில் “தயவுசெய்து எனது ‘லால் சிங் சத்தா’ படத்தை புறக்கணிக்காதீர்கள்.

என் படத்தை கண்டிப்பாக தியேட்டருக்கு சென்று பாருங்கள்” என்று கூறியிருந்தார். தற்போது, அமீர் கானுக்கு எதிராக பிரபல நடிகையும், பா.ஜ.க-வைச் சேர்ந்தவருமான விஜயசாந்தி ட்வீட் போட்டுள்ளார்.

Share.