பிரபுவுக்கு பதிலாக நடித்த விஜயகாந்த்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் ‘புரட்சிக்கலைஞர்’ விஜயகாந்த். 1979-ஆம் ஆண்டு வெளியான படம் ‘இனிக்கும் இளமை’. இது தான் விஜயகாந்த் அறிமுகமான முதல் படமாம். ஆனால், இதில் இவர் வில்லன் ரோலில் நடித்திருந்தார். அதன் பிறகு ‘அகல் விளக்கு’ என்ற படத்தில் தான் விஜயகாந்த் கதையின் நாயகனாக அவதாரம் எடுத்தார்.

அடுத்ததாக 1981-ஆம் ஆண்டு வெளியான ‘சட்டம் ஒரு இருட்டறை’ திரைப்படம் விஜயகாந்திற்கு மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதன் பிறகு இவருக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்ததடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. விஜயகாந்தின் 100-வது படமான ‘கேப்டன் பிரபாகரன்’ 1991-ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தை ஆர்.கே.செல்வமணி இயக்கியிருந்தார். அதன் பிறகு ‘உளவுத்துறை’ 125-வது படமாகவும், ‘அரசாங்கம்’ 150-வது படமாகவும் விஜயகாந்திற்கு அமைந்தது. ‘அரசாங்கம்’ படத்துக்கு பிறகு ‘மரியாதை, எங்கள் ஆசான், விருதகிரி’ ஆகிய படங்களில் நடித்தார்.

விஜயகாந்தின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘சட்டம் ஒரு இருட்டறை’. இந்த படத்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக நடிக்க வைக்க வேண்டுமென எஸ்.ஏ.சந்திரசேகரின் முதல் சாய்ஸாக இருந்தது பிரபல நடிகர் பிரபு தானாம். ஆனால், சில காரணங்களால் பிரபு இப்படத்தில் நடிக்க மறுத்து விட்டாராம்.

Share.