அடேங்கப்பா… விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ மற்றும் இயக்குநர் வம்சி படம் என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘பீஸ்ட் திரைப்படம் இந்த ஆண்டு (2022) ஏப்ரல் 13-ஆம் தேதி திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளில் ரிலீஸானது.

இந்த படத்தை ‘கோலமாவு கோகிலா, டாக்டர்’ புகழ் இயக்குநர் நெல்சன் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்திருந்தார். இப்படத்திற்கு ‘ராக்ஸ்டார்’ அனிருத் இசையமைத்திருந்தார், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்திருந்தார். இதில் விஜய்-க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார்.

மேலும், முக்கிய ரோல்களில் இயக்குநர் செல்வராகவன், VTV கணேஷ், அபர்ணா தாஸ், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ஷைன் டாம் சாக்கோ மற்றும் பலர் நடித்திருந்தார்கள். இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்றது. இந்நிலையில், உலக அளவில் இந்த படத்தின் மொத்த வசூல் ரூ.250.05 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

Share.