‘பிகில்’ படம் மூலம் ஃபேமஸான நடிகை காயத்ரி ரெட்டியின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்!

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் காயத்ரி ரெட்டி. இவருக்கு அமைந்த முதல் தமிழ் படத்திலேயே டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய் தான் ஹீரோவாக நடித்திருந்தார். அது தான் ‘பிகில்’. இந்த படத்தை அட்லி இயக்க, விஜய்-க்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடித்திருந்தார்.

இந்த படம் சூப்பர் ஹிட்டானதும் காயத்ரி ரெட்டி ‘லிப்ட்’ என்ற தமிழ் படத்தில் நடித்தார். இதில் கவின் ஹீரோவாக நடித்திருந்தார். காயத்ரி ரெட்டி இரண்டு படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான ஸ்டில்ஸை ஷேரிட்டு வருவதால் அவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

ஜீ தமிழ் சேனலில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் தொகுத்து வழங்கிய ‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் காயத்ரி ரெட்டியும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. தற்போது, நடிகை காயத்ரி ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல், நிச்சயதார்த்த புகைப்படங்களையும் ஷேர் செய்துள்ளார்.

1

2

3

Share.