விஜய் அறிமுகமான முதல் படம் ‘வெற்றி’… இந்த படத்துக்காக அவர் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் புதிய படமான ‘பீஸ்ட்’-ஐ நெல்சன் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்திருந்தது. இதில் விஜய்-க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார்.

இப்படம் கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி ரிலீஸாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ‘பீஸ்ட்’-ஐ தொடர்ந்து விஜய்-யின் 66-வது படத்தை ‘தோழா’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் வம்சி இயக்குகிறார். இதில் விஜய்-க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இதன் முதல் ஷெட்யூல் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவு பெற்றது.

‘தளபதி’ விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான முதல் படம் ‘வெற்றி’. இதில் விஜயகாந்த் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படத்தை பிரபல இயக்குநரும், விஜய்யின் அப்பாவுமான எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கியிருந்தார். தற்போது, இப்படத்திற்காக நடிகர் விஜய் 500 ரூபாய் சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

Share.