‘பிக் பாஸ் 4’-யில் நானா?… வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் பட நடிகை!

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 வருகிற அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கவுள்ளது . சமீபத்தில், விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ‘பிக் பாஸ்’ சீசன் 4-க்கான நான்கு ப்ரோமோ வீடியோக்களை வெளியிட்டது.

நடிகர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் இடம்பெற்றிருக்கும் இந்த நான்கு ப்ரோமோ வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த ப்ரோமோ வீடியோக்களில் ‘பிக் பாஸ்’-யின் லோகோ டிசைன் புதிதாக டிசைன் செய்யப்பட்டிருந்தது. இந்த சீசன் 4-யில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார்? என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். தினமும் பல பிரபலங்களின் பெயர்களை குறிப்பிட்ட வண்ணமுள்ளது கோலிவுட் வட்டாரம்.

கடந்த சில நாட்களாக பிரபல நடிகை அனுராதாவின் மகள் அபிநயாஸ்ரீ ‘பிக் பாஸ் 4’-யில் கலந்து கொள்ளப்போகிறார் என்று தண்டோரா போடப்பட்டது. விஜய்யின் ‘ப்ரண்ட்ஸ்’, பிரபுவின் ‘பந்தா பரம சிவம்’ போன்ற பல படங்களில் அபிநயாஸ்ரீ நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக அபிநயாஸ்ரீ இன்ஸ்டாகிராமில் “நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப்போவதில்லை” என்று கூறியுள்ளார். வெகு விரைவில் இந்த சீசன் 4-யில் கலந்து கொள்ளப்போகும் அந்த பிரபலங்களின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.