விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் காம்போவில் சூப்பர் ஹிட்டான ‘கத்தி’… இப்படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘மாஸ்டர்’ கடந்த ஆண்டு (2021) பொங்கல் ஸ்பெஷலாக தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடத்திலும் ரிலீஸானது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.

இதில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். தளபதிக்கு எதிரியாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். விஜய்யின் அடுத்த படமான ‘பீஸ்ட்’-ஐ நெல்சன் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்து வருகிறது. இதில் விஜய்-க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மேலும், பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் இயக்குநர் செல்வராகவன் நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளதாம்.

‘தளபதி’ விஜய்யின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘கத்தி’. இந்த படத்தில் விஜய்-க்கு ஜோடியாக சமந்தா நடிக்க, டாப் இயக்குநர்களில் ஒருவரான ஏ.ஆர்.முருகதாஸ் இதனை இயக்கியிருந்தார். இதில் ‘கதிரேசன், ஜீவானந்தம்’ என டபுள் ஆக்ஷனில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார் விஜய். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. இந்த படம் உலக அளவில் ரூ.130 கோடி வசூல் செய்து சாதனை படைத்ததாம்.

Share.