‘மாஸ்டர்’ படத்துக்கு ‘ஏ’ சான்றிதழா?… இத்தனை இடங்களில் கட் பண்ணச் சொன்னதா சென்சார் குழு?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘பிகில்’ கடந்த ஆண்டு வெளியாகி மாஸ் ஹிட்டானது. இவர் நடித்திருக்கும் புதிய படமான ‘மாஸ்டர்’ ரிலீஸுக்கு வெயிட்டிங் லிஸ்டில் உள்ளது.

இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளாராம். இதில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். தளபதிக்கு எதிரியாக விஜய் சேதுபதி நடித்துள்ளாராம். சமீபத்தில், இப்படத்தின் எட்டு பாடல்களை ரிலீஸ் செய்தனர். கடந்த நவம்பர் 14-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக விஜய்யின் ரசிகர்கள் பல மாதங்களாக வெயிட் பண்ணிக் கொண்டிருந்த ‘மாஸ்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை ரிலீஸ் செய்தனர்.

படத்தின் ட்ரெய்லரை வருகிற ஜனவரி 1-ஆம் தேதி நியூ இயர் ட்ரீட்டாகவும், படத்தை பொங்கல் ஸ்பெஷலாக ஜனவரி 13-ஆம் தேதியும் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், படத்தினை பார்த்த சென்சார் குழுவினர் அதிக வன்முறை காட்சிகள் உள்ளதால் 9 இடங்களில் கட்ஸ் கொடுத்து ‘யு/ஏ’ சர்டிஃபிகேட் கொடுப்பதாக சொல்லியுள்ளனர். அக்காட்சிகள் கட் செய்யப்படமால் வெளியிடும் பட்சத்தில் ‘ஏ’ சான்றிதழ் கொடுக்கப்படுமாம்.

Share.