பாலிவுட்டில் மாஸ் காட்டப்போகும் விஜய்… ‘மாஸ்டர்’ ஹிந்தி வெர்ஷனின் டைட்டில் என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘பிகில்’ கடந்த ஆண்டு வெளியாகி மாஸ் ஹிட்டானது. இவர் நடித்திருக்கும் புதிய படமான ‘மாஸ்டர்’ ரிலீஸுக்கு வெயிட்டிங் லிஸ்டில் உள்ளது.

இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளாராம். இதில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். தளபதிக்கு எதிரியாக விஜய் சேதுபதி நடித்துள்ளாராம். சமீபத்தில், இப்படத்தின் எட்டு பாடல்களை ரிலீஸ் செய்தனர். கடந்த நவம்பர் 14-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக விஜய்யின் ரசிகர்கள் பல மாதங்களாக வெயிட் பண்ணிக் கொண்டிருந்த ‘மாஸ்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை ரிலீஸ் செய்தனர்.

படத்தின் ட்ரெய்லரை வருகிற ஜனவரி 1-ஆம் தேதி நியூ இயர் ட்ரீட்டாகவும், படத்தை பொங்கல் ஸ்பெஷலாக ஜனவரி 13-ஆம் தேதியும் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே, இப்படம் மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளில் டப் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இதன் ஹிந்தி வெர்ஷனுக்கு ‘விஜய் தி மாஸ்டர்’ (Vijay The Master) என டைட்டில் சூட்டப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும், ஹிந்தி வெர்ஷனுக்கான டப்பிங் பணியும் முடிவடைந்து விட்டதாம்.

Share.